Events
நம்மஊரு சந்தை - கோயம்புத்தூர் 2023 (Jan 8)
Facebook · 03 Jan 2023

மேயர் கல்பனா ஆனந்தகுமார்அவர்களின் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் IAS அவர்கள், துணை மேயர் வெற்றிச்செல்வன் அவர்கள், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் அவர்கள் அனைவரும் துவக்கிவைத்து சிறப்பிக்கின்றனர்.
*நிகர் கலைக் கூடத்தின்* *_பறையிசை_**,
*பேராசிரியர் ராம்ராஜ்* அவர்களின் *_நாடகம்_*,
*மரப்பாச்சி பாலமுருகன்* அவர்களின் *_குழந்தைகளுக்கான மரபு விளையாட்டுக்களுடன்_* கொண்டாடுவோம் வாருங்கள்!!
சந்தையில், பாரம்பரிய அரிசிவகைகள், சீர்தானியங்கள், மரசெக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, கற்கண்டு.
குழம்பு பொடி வகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள்
மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள் வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சாயமேற்றாத பருத்தி உள்ளாடைகள், அணையாடைகள்
உடல் சுத்தப்பொடிகள், வெட்டி வேர்பொருட்கள், சுத்தப்படுத்திகள், தேன் மெழுகில் செய்த சோப்புகள், மருந்துப்பொருள்கள், உடல்பொலிவு பொருட்கள் (Cosmetics) மண்பாண்டப் பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பயன்பாட்டு பொருட்கள் பனை ஓலைப் பொருட்கள், சாப்பிட மதிய உணவு, அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, நீரா பானம் என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும்.
அனைவரும் வருக!!, அனுமதி இலவசம்..
எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வாங்க.
(முற்றிலுமாக ஞெகிழி இல்லா சந்தை இது)
நண்பர்களுக்கும் பகிருங்கள்..